• Latest News

    December 04, 2013

    புதிய வகை பறவைக் காய்ச்சல் பரவுவதாகத் தகவல்

    ஹாங் காங்கில் பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிகப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    எச்7என்9 எனும் வகைக் கிருமியால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
    இது, பறவைக் காய்ச்சலின் புதிய வகை ஒன்று மேலும் பரவி வருவதின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
    பாதிக்கப்பட்டுள்ள நபர் இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்தவர் எனவும், வீட்டுப் பணியாளராக வேலை செய்த அவர் அண்மையில் சீனாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.
    இதற்கு முன்னர் இவ்வகையான பறவைக் காய்ச்சலால் ஒருவர் தாய்வானில் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

    இந்த புதிய வகை கிருமித் தாக்குதல் கடந்த ஏப்ரல் மாதம் முதலில் தெரியவந்தது. அதன் காரணமாக ஐம்பது பேர் உயிரிழந்தனர்.

    தமது பகுதியில் ஒருவர் எச்7என்9 வகை கிருமியால் உண்டாகும் பறவைக் காய்ச்சலால் தாக்கப்பட்டுள்ளார் என்கிற தகவலை அடுத்து ஹாங் காங், தமது எல்லையை அண்டிய சீனாவின் பெருநிலப் பரப்பிலிருக்கும் மூன்று பண்ணைகளிலிருந்து கறிக்கோழி இறைச்சி இறக்குமதி இடை நிறுத்தியுள்ளது.
    BBC-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புதிய வகை பறவைக் காய்ச்சல் பரவுவதாகத் தகவல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top