• Latest News

    December 15, 2013

    நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு முற்றிலும் வேறுபட்டவர்கள் - வடமாகாண சபை முதலமைச்சர்

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு, கட்சியால், மொழியால், கலைகளால் வேறுபட்டவர்கள். இதனால் தான் எமக்கு அதிகாரப்பகிர்வு தேவைப்படுகின்றது. எம்மை நாமே ஆள்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டுமென வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

    கரவெட்டி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் சபைத் தலைவர் பொ.வியாகேசுவின் தலைமையில இடம்பெற்றது.
    இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
    அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

    எமது மக்கள் நலன்சார்ந்து பலவற்றை நாம் அரசிடம் கேட்கின்றோம். ஆனால் நாம் கேட்பவற்றை வழங்கக் கூடாது என்ற மன நிலையில் பெரும்பானமை சமூகம் இருகின்றது. இந்த எண்ணம் மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் அரசை நம்பியிருக்கக் கூடாது. எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.

    மத்திய அரசுக்கு அடுத்தபடியாக மாகாணசபையும் அதற்கு அடுத்த நிலையில் பிரதேச சபைகளும் உள்ளன. ஒவ்வொருவரும் அடுத்தவரது எல்லைக்குள் பிரவேசிக்காமல் இருந்தால் தான் சுமுகமான உறவினைக் கட்டியெழுப்பமுடியும்.

    நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு, கட்சியால், மொழியால், கலைகளால் வேறுபட்டவர்கள். அதனால் தான் எமக்கு அதிகாரப்பகிர்வு தேவைப்படுகின்றது. எம்மை நாமே ஆள்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டும்.

    அரசு தமது கருத்தைப் பலப்படுத்தி எம்மை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. அரசு எமக்கு நேசக்கரம் நீட்டுவது போல நீட்டி எம்மை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு முற்றிலும் வேறுபட்டவர்கள் - வடமாகாண சபை முதலமைச்சர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top