• Latest News

    December 15, 2013

    பாங்கொக்கில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடருவது தொடர்பான இரகசிய சந்திப்பு!

    பாங்கொக்கில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடருவது தொடர்பான இரகசிய சந்திப்பு ஒன்று ஒக்ரோபர் பிற்பகுதியிலும் நவம்பர் முற்பகுதியிலும் இடம்பெற்று உள்ளதாக தேசம்நெட் தெரிவிக்கின்றது. புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து பிரிந்து சென்று தீப்பொறி என்ற அமைப்பை உருவாக்கி அதில் இருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் இச்சந்திப்பை முன்நின்று ஏற்பாடு செய்திருந்தனர் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் குறித்த சந்திப்பில் முன்னாள் தீப்பொறி உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம், நாடுகடந்த தமிழீழ அரசு மற்றும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
    கனடா, ஐரோப்பா, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 25 பேர் வரை கலந்துகொண்ட இச்சந்திப்பிற்கு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் கனடாவிலும், லண்டனிலும் இடம்பெற்றது. இந்த இரகசிய சந்திப்பற்கு முன்னதாக கனடாவில் இருந்து வந்த முன்னாள் தீப்பொறி உறுப்பினர் லண்டனில் சில சந்திபுக்களை மேற்கொண்டுள்ளார்.

    ஆரம்ப காலத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து வெளியேறி தீப்பொறியில் இணைந்து பின் அதிலிருந்து வெளியேறிய மததிரிபுக்குழுவுடன் இணைந்த ஒருவரையும் இவர்கள் அணுகி உள்ளனர். ஆண்டவர் உங்களை காப்பாராக! என்று அவர் சந்திப்புக்கு வந்தவர்களை வழியனுப்பி வைத்ததாக தெரியவருகிறது. இந்த முன்னேற்பாட்டு சந்திப்புக்களில் சிலர் தங்கள் ஐயத்தை வெளிப்படுதி ஒதுங்கி இருந்துள்ளனர் என்றும் தெரய வருகிறது.

    பாங்கொக்கில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் பிரிவு – பிரித்தானிய தமிழர் பேரவை கலந்துகொள்ளவில்லை அல்லது அழைக்கப்படவில்லை.

    இந்த இரகசிய சந்திப்பின் பின்னணியில் ஏதாவது நாடுகள் அவற்றின் உளவு ஸ்தாபனங்கள் உள்ளதா? இச்சந்தப்பிற்கான நிதி ஏற்பாட்டினை யார் மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவில்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாங்கொக்கில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடருவது தொடர்பான இரகசிய சந்திப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top