• Latest News

    December 14, 2013

    பழைய இரும்பாக மாறியுள்ள பொது மக்களின் வாகனங்கள்!

    இறுதி யுத்தத்தின் போது மக்களால் கைவிடப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் குவிக்கப்பட்டிருந்த வாகனங்கள், துவிச்சக்கரவண்டிகள் பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இதனால், தமிழ் மக்கள் கைவிட்டுச் சென்ற உரிமை கோரப்படாத மற்றும் உரிமையாளரிடம் ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் தென் பகுதி நோக்கி வியாபாரிகளால் கொண்டு செல்லப்படுகின்றது.

    இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களால் கைவிடப்பட்டு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த வாகனங்கள் பழைய இரும்புக்காக விற்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது,

    கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் பராமரிக்கப்பட்ட வாகனங்களில் பல பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், ஏனையவற்றை மாவட்ட செயலகம் பராமரித்து வந்தது. எனினும் அவை பாவனைக்குட்படுத்த முடியாத நிலையில் பழுதடைந்து காணப்படுவதாலும் டெங்கு நுளம்பு பெருகும் சூழலை கொண்டு காணப்படுவதாலும் அவை ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

    மேற்படி வாகனங்கள் உரிய அமைச்சரவையின் அங்கீகாரத்தினைப் பெற்று சட்டமா அதிபரின் அனுமதியுடன் ரூபா 10 மில்லியன் ரூபாவிற்கு விற்கப்பட்டுள்ளதுடன், இந்த நிதியினை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பழைய இரும்பாக மாறியுள்ள பொது மக்களின் வாகனங்கள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top