கல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் வேண்டாம் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கு தமிழ் பிரதேச சபையே உருவாக்கப்பட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதற்காக கடந்த 25 வருடங்களாக உப பிரதேச செயலகமாக செயற்படும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி அதற்கு பின்னர் அதனை பிரதேச சபையாக மாற்ற வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
எனினும், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு தெரிவிக்கின்றமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.இதற்காக கடந்த 25 வருடங்களாக உப பிரதேச செயலகமாக செயற்படும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி அதற்கு பின்னர் அதனை பிரதேச சபையாக மாற்ற வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
இந்த சர்ச்சை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச வேண்டி ஏற்பாட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயம் இன்று நேற்று உருவானத்தல். இது தொடர்பில் 1990ஆம் ஆண்டு நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளேன். எனக்கு முன்னரும் பின்னரும் இந்த விடயம் குறித்து பலர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மறைந்த அமைச்சர் அஷ்ரபின் காலப் பகுதியில் முஸ்லிம்களுக்காக நான்கு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டன. அப்படியான நிலையில் ஏன் தமிழர்களுக்காக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த முடியாது என அவர் கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம் பிரதேச செயலகங்களிற்குள் தமிழ் மக்கள் வாழ முடியுமென்றால் ஏன் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் கீழ் குறிப்பிட்ட தொகையான முஸ்லிம் மக்கள் வாழ முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
Tamilmirror-

0 comments:
Post a Comment