• Latest News

    January 31, 2014

    பிழையான அறுவைச் சிகிச்சைக்கு 33 கோடியே 53 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு: லண்டனில் நடைபெற்ற சம்பவம்

    லண்டனின் பிரபல குழந்தைகள் மருத்துவமனை ஒன்று தவறு தலாக சிறுமியின் மூளைக்குள் பசை போன்ற திரவத்தை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு மூளை நரம்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்ட காரணத் திற்காக மய்ஷா நஜீப் என்ற 10 வயது சிறுமி லண்டன் ஆர் மண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை நரம்பு ரத்தக் கசிவைச் சரி செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அதில் மூளை நரம்பில் உள்ள ரத்தக்கசிவை நிறுத்துவதற்காக பசை போன்ற மருந்து ஒன்று செலுத்தப்பட்டது.

    ஆனால் அது தவறுதலாக அவரது இடது பக்க மூளைக்குள் சென்று விட்டது. இதனால், அறுவைச் சிகிச்சை முடிந்த சில தினங்களில் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியுள்ளன. அதனைத் தொடர்ந்து சிறுமி சார்பில் மருத்துவ மனை நிர்வாகம் மீது வழக்கு போடப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம் பிர்ட்லெஸ் சிறுமிக்கு 33 கோடியே 53 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். மேலும் சிறுமிக்கு 18 வயது ஆகும் வரை ஆண்டு தோறும் 4 கோடியே 59 லட்சத்து 45 ஆயிரத்து நானூற்று நாற்பத்திரண்டு ரூபாய் வழங்கவும், 18 வயது முடிவடைந்து 19 வயது தொடங்கும் போது இந்த தொகையை 5 கோடியே 7 லட்சத்து 64 ஆயிரத்து முப்பத்தொன்பது ரூபாயாக உயர்த்தி வழங் கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிழையான அறுவைச் சிகிச்சைக்கு 33 கோடியே 53 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு: லண்டனில் நடைபெற்ற சம்பவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top