எஸ்.அஷ்ரப்கான்;
மத்திய முகாம் பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழத்தின் 5வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச முஸ்லிம் கல்விமான்கள் கௌரவிப்பு, பாலர் பாடசாலை மாணவர்களின் கலை மற்றும் பரிசளிப்பு விழா நாளை (31.12.2013) மத்திய முகாம் பிரதான வீதி ஆலையச் சந்தியில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பிரண்ட்ஸ் வினையாட்டுக் கழத்தின் ஸ்;தாபகத் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச கொள்கை பரப்புச் செயலாளருமான ஏ.எம்.மஃறூப் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீதியமைச்சருமான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹசனலி, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும், சவூதி அரேபிய தூதுவராலய பொதுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிர், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.தஜாப்தீன் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment