• Latest News

    December 17, 2013

    கொழும்பில் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு பொலிஸார் தடை!

    எஸ்.ஆர் ;
    கொழும்பிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகளை இடைநிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் இந்த உத்தரவு தொடர்பாக பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.
     
    தெஹிவளை, அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா, களுபோவில மஸ்ஸிதுல் தாருல் சாபீய், தெஹிவளை தாருல் அர்க்கம் ஆகிய பள்ளிவாசல்களுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
    கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலிஸார் தொழுகைகளை நடத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

    இது தொடர்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    'கடந்த இரு தினங்களுக்கு முன்னர்  குறித்த மூன்று பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலிஸார் தொழுகை நடத்தக்கூடாது என்று பள்ளி பாரிபாலன சபையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் எனது கவனத்திற்கு கொண்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்'.

    'மதத் தலங்கள் மீது மீண்டும் ஆரம்பிக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இவ்வாறான மத விடயங்கள் தொடர்பில் தலையீடு செய்வதானது சட்டத்திற்கு முரணானதாகும். பள்ளிவாசல்கள் தொடர்பில் அவற்றை நிர்வாகம் செய்வது வக்பு சபையாகும். நாடாளுன்றத்தில் நிறைவேற்றப்ட்ட சட்டங்களுக்கு அமைய இந்த வக்பு சபை ஸ்தாபிக்கப்பட்டது.

    இதனை மீறி பள்ளிவாசல்களை மூடுவதற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் தடைகளை ஏற்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கையினையெடுக்க வேண்டும்' என  பொலிஸ்  மா அதிபரிடம் தெரிவித்துள்ளேன். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெஹிவளை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் நிர்வாகத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்பின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

    இந்த அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மதகுருவே பின்னணியில் இருப்பது குறித்து பிரதேச மக்கள் கருதுவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மஸ்ஜீது தாருஸ் சாபி பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன், தற்பேதைய நிலை தொடர்பில் நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பில் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு பொலிஸார் தடை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top