• Latest News

    December 17, 2013

    , முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கும் அனுமதி வழங்க வேண்டும்

    எஸ்.ஆர்;
    பாடசாலைகளில் முஸ்லிம்கள் அறபு மொழி கற்கவும், முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்ற  வேண்டுகோளை பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
    பிரான்ஸ், அதன் குடியேறிய மக்களை சிறப்பாக ஒருங்கிணைக்க கண்டிப்பாக மதச்சார்பின்மையை கடைப்பிடிக்க வேண்டும்.

    கீழத்தேய அரபு மொழி மற்றும் கலாச்சாரங்களின் பரிணாமத்தையும் பிரான்ஸ் அங்கீகரிக்க வேண்டும். ஊர் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றுவது, அதன் வரலாறு பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல், புலம்பெயர் கலாச்சாரங்களின் பங்களிப்பினைப் பாராட்ட குறித்த நாள் ஒன்றை ஏற்பாடு செய்தல் போன்றன இதற்கு உதாரணங்களாக சுட்டிக் காட்ட முடியும்.

    இது இனவாதத்தை ஒழிக்கவும், சமத்துவத்தை மேலோங்க செய்யவும் சிறந்த நடவடிக்கையாக கருதப் படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: , முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கும் அனுமதி வழங்க வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top