• Latest News

    December 17, 2013

    ஜாதிக ஹெல உறுமயவை அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்; கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன

    பைரூஸ்;
    ஜாதிக ஹெல உறுமயவானது பைத்தியக்கார கும்பலை சார்ந்தவர்கள். ஆகவே இந்த பைத்தியக்கார கும்பலை உடனடியாக அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும். பிரதமர் ஒரு நல்ல மனிதர். அவரும் நானும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். எனவே அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும். அவரை பதவியிலிருந்து விலக்க இவர்கள் யார்?
    இவ்வாறு இலங்கை நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்
    அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

    பிரதமர் டி.எம். ஐயரட்னவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கோரும் ஜாதிக ஹெல உறுமயவை அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும். அத்துடன் ஐ.நா. அகதிகளுக்கான விஷேட அறிக்கையாளர் சலோகா பெயானியின் பரிந்துரைகளை நிறைவேற்றாவிடின் இலங்கை அரசாங்கம் பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    பிரதமர் டி.எம்.ஜயரட்ணவை உடனடியாக பதவியிலிருந்து விலக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொதுபல சேனா அமைப்பினர் கோரி வரும் நிலையில் ஜாதிக ஹெல உறுமய இது தொடர்பான கடிதமொன்றை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது. மேற்படி கடிதத்தை அக்கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரரே அனுப்பி வைத்துள்ளார்.

    ஜாதிக ஹெல உறுமயவானது பைத்தியக்கார கும்பலை சார்ந்தவர்கள். ஆகவே இந்த பைத்தியக்கார கும்பலை உடனடியாக அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும். பிரதமர் ஒரு நல்ல மனிதர். அவரும் நானும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். எனவே அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும். அவரை பதவியிலிருந்து விலக்க இவர்கள் யார்?

    தற்போது அரசின் பங்காளி கட்சியாக ஜாதிக ஹெல உறுமய திகழ்ந்த போதிலும் குறித்த கட்சியை எவரும் கண்டுகொள்வதில்லை. ஜாதிக ஹெல உறுமயவை அரசிலிருந்து விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே ஜாதிக ஹெல உறுமய மனநோயிலிருந்து விடுபட வேண்டும் என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜாதிக ஹெல உறுமயவை அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்; கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top