• Latest News

    December 31, 2013

    தலைமையின் கட்டளைக்கு மாற்றமாக பிரதேச சபை உறுப்பினர் தஜாப்தீன் செயற்பட்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்! ஹக்கிம் சற்று முன் அறிவிப்பு!

    சஹாப்தீன்;
    நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவு திட்டத்திற்கு மு.காவின் உறுப்பினர் தஜாப்தீன் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அவ்வாறு அவர் தலைமைத்துவத்தின் கட்டளைக்கு மாற்றமாக செயற்பட்டால் கட்சியில் இருந்து நீக்கும் அளவிற்கு  நடவடிக்கைக்கு உட்படுவார். ஆயினும் அவர் தற்போது, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என மு.காவின் தலைவர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம் சற்று முன்னர் மத்திய முகாம் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவமொன்றின் போது தெரிவித்தார்.

    எதிர்வரும் 02.01.2014 அன்று நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. இதற்கு ஆதரவாக மு.காவின் உறுப்பினர் தஜாப்தீன் வாக்களிக்க வேண்டுமென்று மு.கா கட்டளையிட்டுள்ளது. அவர் வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தால் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சி நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் ரவூப் ஹக்கிம் எச்சரிக்கை செய்தார்.

    ஆனால், அவர் வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் முடிவில் உள்ளார். கடந்த 23.12.2013 அன்று நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின் அமர்வில் வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது தஜாப்தீன் எதிராக வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே வேளை, இன்று நடைபெற்ற கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டத்தின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது வெளிநடப்புத் செய்தார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தலைமையின் கட்டளைக்கு மாற்றமாக பிரதேச சபை உறுப்பினர் தஜாப்தீன் செயற்பட்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்! ஹக்கிம் சற்று முன் அறிவிப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top