எம்.வை.அமீர் ,எஸ்.எம்.எம்.ரம்சான்;
கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் இன்று மிகுந்த பரபரப்பிற்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று சமர்ப்பிக்கப்பட்டது. வரவு-செலவு திட்டத்திற்கு மு.காவின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க உள்ளார்களா அல்லது எதிராக வாக்களிக்க உள்ளார்களா வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விகளுக்கு மத்தியிலேயே கல்முனை மாநகர சபையின் இன்றைய அமர்வினை பலரும் நோக்கினர். இன்றைய அமர்வில் வழமைக்கு மாறாக அதிகளவில் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள் என்பது விசேட அம்சமாகும்.
கடந்த 2013-12-23ம் திகதி சமர்ப்பிக்கப்பட இருந்த வரவு செலவு திட்டம் சில முஸ்லீம் காங்கிரஸ்சின் உறுபினர்களின் துணையுடன் தோற்கடிக்க முஸ்தீபுகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததன் காரணமாகவும், மாநகரசபை கட்டளைச்சட்டத்தின் 212 ஆவது பிரிவின் கீழ் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு உறுப்பினர்களுக்கு 07 நாட்களுக்கு முன்பு கையளிக்க படாததன் காரணமாகவும் 2013-12-31 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.மிகுந்த சர்ச்சையாக பேசப்பட்ட கல்முனை மாநகரசபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முதல்வர் நிஸாம் காரியப்பர் 2014ம் ஆண்டுக்கான கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்தார். பின்னர் முதல்வர் நிஸாம் காரியப்பரின் உரை இடம்பெற்றது.
அவரின் உரையைத்தொடர்ந்து கருத்துத்தெரிவித்த பிரதி முதல்வர் சிராஸ் மீராசாஹிப் முதல்வரால் முன்வைக்கப்பட்டுள்ள 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது சிறந்த ஒரு வரவு செலவுத்திட்டம் என்றும் இந்த வரவு செலவுத்திட்டத்தை கடந்த காலங்களில் ஏகமனதாக ஆதரித்தது போன்று இம்முறையும் கட்சிபேதமின்றி ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு 04 ஐ.தே.கவின் ஒரு உறுப்பினரும் விவாதமுடிவில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு 04 ஐ.தே.கவின் ஒரு உறுப்பினரும் விவாதமுடிவில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
எஞ்சிய முஸ்லீம் காங்கிரசின் 11உறுப்பினர்களுடன் பொது ஜன ஐக்கிய முன்னணியின் மூன்று உறுப்பினர்களும் இணைந்து ஏகமனதாக வரவு செலவு திட்டத்தை அங்கீகரித்தது நிறைவேற்றினர்.
வரவு செலவு திட்ட விவாதம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் கல்முனை மாநகரசபை முன்பாக வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரதேச வாசிகள் பதாதைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நின்று கொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.







0 comments:
Post a Comment