• Latest News

    December 10, 2013

    இலங்கை விமானத்தில் திடீர் கோளாறு : பயணிகள் உயிர் தப்பினர்!


    நேற்று மாலை திருச்சியிலிருந்து இலங்கை புறப்பட்ட ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ்  விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு உடனே கண்டுபிடிக்கப் பட்டதால், பயணிகள் உயிர் தப்பினர்.
    srilankans
    இந்த விமானம், நேற்று (09) மாலை 4:00 மணிக்கு திருச்சியில் இருந்து, 147 பயணிகளுடன் இலங்கை புறப்பட்டபோதே இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
    விமான நிலைய ஓடுதளம் நோக்கி நகர்ந்து, பறப்பதற்கு வேகம் எடுத்த போது, விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, விமானத்தை மீண்டும், விமான நிலையத்திற்கே கொண்டு வந்தார் விமானி.
     உடனடியாக  விமானத்தை பரிசோதித்த பொறியாளர்கள் அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருந்ததை உறுதி செய்தனர். பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு, மாலை, 4:50 மணிக்கு, விமானம், மீண்டும் இலங்கை வந்தடைந்தது.  விமானத்தில் ஏற்பட்ட கோளாறு, அது பறக்கும் முன் கண்டுபிடிக்கப் பட்டதால், பயணிகள் உயிர் தப்பினர். 
    MT
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை விமானத்தில் திடீர் கோளாறு : பயணிகள் உயிர் தப்பினர்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top