
யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டத்தினால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிகநீண்ட காலமாக சிற்றூழியர்களாக பணியாற்றி வரும் சிற்றூழியர்கள் புறக்கணிக்கப்பட்டு புதியவர்களுக்கு நியமனம் வழங்ப்படவுள்ளதையதை எதிர்த்து நேற்று முதல் சிற்றூழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 04 வருடங்களிற்கு மேலாகயாழ் போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்ளாக கடமையாற்றிவருபவர்களை புறக்கணித்து விட்டு புதியவர்கள் நிமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வைத்திய சாலையில் லிப்ட் வசதியில்லாத காலத்திலும் நாங்கள் நோயளர்களை செச்சர்களில் தூக்கி நாங்கள் சேவையாற்றி வருகின்றோம் எனவே இந்த நியமனத்தில் எங்களை உள்வாங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.
சிற்றூழியர்களின் இந்த வேலைநிறுத்தத்தையடுத்து வைத்திய சாலையில் நோயாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக வைத்திய சாலைக்கு வரும் நோயாளர்களை விடுத்திக்கு கொண்டு செல்லும் பணியை இதுவரை காலமும் சிற்றூழியர்களே மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது நோயாளர்களின் உறவினர்களே விடுதிகளுக்கு கொண்டு செல்லும் நிலைகாணப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment