• Latest News

    December 14, 2013

    பொலிஸாரை பார்த்து ஆடைகளை கலைந்து கூக்குரலிட்ட பெண்களுக்கு பிணை மறுப்பு!

    ஆடைகளை கலைந்து   பொலிஸாரை பார்த்து கூக்குரலிட்ட பெண்களுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.ஜாஎல தடுகம பிர தேசத்தில் சட்டவிரோதமான முறையில் சூதாட்ட நிலைய மொன்று நடத்தப்பட்டு வந்துள்ளது. பெண் ஒருவரும் அவரது இரண்டு மகள்களும் இவ்வாறு சூதாட்ட நிலையத்தை நடத்தி யுள்ளனர்.குறித்த சட்ட விரோத சூதாட்ட நிலையத்தை பொலி ஸார் அண்மையில் சுற்றி வளைத்தபோது பொலிஸாரைக் கண்ட குறித்த மூன்று பெண்களும் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக பொலிஸாருக்கு எதிராக கூக்குரல் இட்டுள்ளனர்.
    மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏனைய ஐந்து ஆண்களும் ஆடைகளைக் களைந்து கூக்குரலிட்டுள்ளனர். பெண்களும் ஆண்களும் ஆடைகளை களைந்து நிர்வணமாக கூக்குரலிட்டு ஆடியதாக பொலிஸார் முறைப்பாடு செய்துள் ளனர்.நிர்வாண ஆட்டத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பெண் பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    பெண்கள் நிர்வாண ஆட்டம் போடுவதாக கேள்வியுற்ற பலர் அந்த இடத்தில் குழுமியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் உள்ளிட்ட எட்டு பேரையும் பிணையில் செல்ல அனுமதிக்க முடியாது எனவும்இ 18ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொலிஸாரை பார்த்து ஆடைகளை கலைந்து கூக்குரலிட்ட பெண்களுக்கு பிணை மறுப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top