• Latest News

    December 16, 2013

    தமிழ் பேசும் மக்களின் பலத்தை உடைக்க பொது பல சேன சதி; மு.காவின் செயலாளர் ஹஸன்அலி எம்.பி

    தமிழ் பேசும் சமூகத்தினரின் பலத்தை உடைத்தெறிவதற்கான ஒரு சதித் திட்டமாகவே கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு பின்னணியாக பொது பல சேன இருக்கின்றது என  மு.காவின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி தெரிவித்துள்ளார்.
    அவர் மேலும் தெரிவிதுள்ளதாவது,

    பொது பல சேனாவை பிரதிநிதித்துவப் படுத்தும் தேரர் ஒருவரே கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை சகல அதிகாரங்களும் கொண்டதாக தரமுயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

    குறித்த விவகாரம் தொடர்பாக குறித்த தேரர் தலமையில் ஆளும் கட்சிக்கு
    வக்காளத்து வாங்கும் ஒரு சிலர் பொது நிர்வாக உள்ளநாட்டு அலுவல்கள் அமைச்சர்  ஜோன் செனிவரட்னவை ஐந்து தடவைக்கு மேல் சந்தித்துள்ளனர் இவர்கள் அமைச்சருக்கு பொய்யான தகவல்களை அமைச்சருக்கு கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் ஏற்கனவே கருத்துரைத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தமிழ் பேசும் சமூகத்தினரின் பலத்தை உடைத்தெறிவதற்கான ஒரு சதித் திட்டமாகவே கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் முன்னெடுக்கப்படுகிறது என  தெரிவித்துள்ளார்.

    இது விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகளும் சிவில் சமூகத்தினரும் விழிப்புடன்

    செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழ் பேசும் மக்களின் பலத்தை உடைக்க பொது பல சேன சதி; மு.காவின் செயலாளர் ஹஸன்அலி எம்.பி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top