• Latest News

    January 15, 2014

    புறக்கோட்டையில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான பழுதடைந்த பொருட்கள் மீட்பு!

    புறக்கோட்டையில் அமைந்துள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் கொழும்பு மாநாகர சபையினர் நடத்திய சோதனையில், 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

    இந்தப் பொருட்கள் அனைத்தும் கொழும்பின் முக்கிய பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


    பதிவு செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், கருவாடு, சீனி, பேரீச்சம்பழங்கள், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, மிளகு, வெங்காயம் ஆகிய பொருட்கள் சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு இருந்ததாக கொழும்பு மாநாகர சபை தெரிவித்துள்ளது. இவற்றின் பெறுமதி 6 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி, டொக்டர் பிரதீப் காரியவசம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,

    வெளிநாடுகளிலிருந்து குறைந்த செலவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நாம் அப்புறப்படுத்தி வருகின்றோம்.

    அதுமட்டுமின்றி, காலாவதியான பொருட்களின் திகதிகள் மாற்றம் செய்யப்பட்டு மீள் பொதி செய்யப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்தப் பொருட்கள் கண்டியிலிருந்து பொதி செய்யப்பட்டு கொழும்பில் விற்பனை செய்யப்படுகின்றன.

    இவ்வாறான காலாவதியான பொருட்கள் சிறிய ஹொட்டல்களில் காணப்படவில்லை. பிரபல நட்சத்திர ஹொட்டல்களிலே காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புறக்கோட்டையில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான பழுதடைந்த பொருட்கள் மீட்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top