பைரூஸ்;
ஆளுங் கட்சியின் உள்ளுராட்சியின் அதிகாரத்திற்குரிய பல உள்ளுராட்சி மன்றங்களின் வரவு-செலவு திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதனை அடுத்து, உள்ளுராட்சி மன்றங்களின் சட்ட மூலத்தில் மீண்டும் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
வருடாந்த வரவு-செலவுத்திட்டம் தோற்றுபோனாலும்; முன்னைய உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள் அல்லது தலைவர்களை தொடர்ந்து பதவியிலிருக்க வகைசெய்யும் வகையிலேயே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இந்த சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
15 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பதவிவிலக காரணமாக அமைந்த வரவு-செலவுத்திட்ட தோல்விகள் காரணமாக அரசாங்கம் இந்த சட்டத்தை திருத்த முனைந்துள்ளது.ஆளுங் கட்சியின் உள்ளுராட்சியின் அதிகாரத்திற்குரிய பல உள்ளுராட்சி மன்றங்களின் வரவு-செலவு திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதனை அடுத்து, உள்ளுராட்சி மன்றங்களின் சட்ட மூலத்தில் மீண்டும் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
வருடாந்த வரவு-செலவுத்திட்டம் தோற்றுபோனாலும்; முன்னைய உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள் அல்லது தலைவர்களை தொடர்ந்து பதவியிலிருக்க வகைசெய்யும் வகையிலேயே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இந்த சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இரண்டு தடவைகள் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் பதவிவிலக வேண்டுமென 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்த திருத்த பிரேரனையில் கூறப்பட்டுள்ளது என உள்ளூராட்சிமன்ற அமைச்சர் எ.எல்.எம்.அதாவுல்லா கூறினார்.
இந்த சட்டத்தின் நோக்கம் உள்ளூராட்சி மன்ற தலைவர்களின் எதேச்சாதிகார போக்கை கட்டுப்படுத்துவதாகவே இருந்தது. ஆயினும், சுயநல நோக்கில் உள்ளூராட்சி தலைவர்களை பதவி விலக்குவதற்காக வரவு-செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்படுவதை நிறுத்தவே இந்த சட்டத் திருத்தம் அவசியமாகின்றது என அமைச்சர் எ.எல்.எம்.அதாவுல்லா கூறினார்.

0 comments:
Post a Comment