• Latest News

    January 01, 2014

    மகர சிறை அதிகாரியின் ஆட்டோவை பயன்படுத்தி 2 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்!

    மகர சிறைச்சாலையின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகள் சிறைசாலை அதிகாரி ஒருவரின் முச்சக்கர வண்டியை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

    தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் கொழும்பு தெமட்டக்கொட பிரதேசத்தை சேர்ந்த போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்டவர் என்றும் மற்றவர் கொள்ளைச்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கைதி என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
     
    இந்த கைதிகள் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு தப்பிச் சென்றிருந்ததுடன் அவர்கள் தப்பிச் சென்றது குறித்த தகவல் மாலை 4 மணிக்கே அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

    சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரத்ன பல்லேகமவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மகர சிறை அதிகாரியின் ஆட்டோவை பயன்படுத்தி 2 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top