• Latest News

    January 31, 2014

    சூடு பிடிக்கும் 2016 ற்கான அமெரிக்கத் தேர்தல் : 69வது வயதில் அமெரிக்க அதிபராவாரா ஹிலாரி? -

    2016-ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்களின் பந்தயத்தில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டனும் இடம் பிடித்துள்ளார்.

    அத்தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ள கிரிஸ் கிரிஸ்டியை எதிர்த்து ஹிலாரி போட்டியிடுவதே சிறந்த தேர்வாக இருக்கும் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2008 ஆம் நடந்த அதிபர் வேட்பாளருக்கான பந்தயத்தில் நாடு முழுவதிலுமிருந்து அவருக்கு 18 மில்லியன் மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது அவருக்கு மேலும் ஆதரவு பெருகி உள்ளதாக கூறப்படுகிறது.
    ஆனால் அதே ஜனநாயக கட்சியிலிருந்து ஜோ பிட்டனும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கும் ஹிலாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் குடியரசு கட்சி சார்பில் பால் ரியான், ஜெப் புஷ் மற்றும் கிரிஸ்டி இடையேயும் கடும் போட்டி நிலவி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ஒரு வேளை அமெரிக்க அதிபராக ஹிலாரி தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள பட்சத்தில், அவர் ஜனவரி 2017-ல் தனது 69வது வயதில் அப்பதவியை ஏற்பார் என கூறப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சூடு பிடிக்கும் 2016 ற்கான அமெரிக்கத் தேர்தல் : 69வது வயதில் அமெரிக்க அதிபராவாரா ஹிலாரி? - Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top