நீர்கொழும்பு மீனவர்கள், கடந்த எட்டு மாத காலமாக எரிபொருள் மானியம் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து படகுகளில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நீர்கொழும்பைச் சேர்ந்த மீனவ சங்கங்கள் பல ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் நீர்கொழும்பு கொத்தலாவல பாலத்தின் கீழ் களப்பில் காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
ஆர்ப்பாட்டத்தில் 500 இற்கும் மேற்பட்ட சிறிய படகுகளில் பல நூற்றுக் கணக்கான மீனவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தி தமது எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர்.
'எமது மீனவ சகோதரர் ஒருவரின் உயிரை பலிகொடுத்த பின்னரே எரிபொருள் மானியம் கிடைத்தது. ஆயினும் கடந்த எட்டு மாத காலமாக அது கிடைக்கவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் துன்பத்தை புரிந்து எரிபொருள் மானியத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.




0 comments:
Post a Comment