எகிப்தில் பொலிஸ் படையை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகத்
தென்படும் குண்டுத் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 70 பேர்
காயமடைந்துள்ளனர்.
கெய்ரோவில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு வெளியே
நடந்த கார் குண்டுத் தாக்குதலுடன் இந்தத் தாக்குதல்கள் ஆரம்பித்தன. முதல்
தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 51 பேர் காயமடைந்தனர்.
அல்கைதாவால் கவரப்பட்ட ஒரு தீவிரவாதக் குழுவான அன்சார் பெய்ட் அல்-மக்டிஸ் இதற்கு உருமை கோரியுள்ளது.

0 comments:
Post a Comment