சிங்கள ராவய அமைப்பை சேர்ந்த 12 பேர்
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் இன்று சரணடைந்தனத நிலையில் அவர்கள்
நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். கொழும்பு
பிரதமரின் அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தி அலுவலகத்துக்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்டமை தொடர்பிலேயே இவர்கள் சரணடைந்துள்ளனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது,
சட்டவிரோதமாக கூடியது, கலவரத்தை ஏற்படுத்தும் படியாக நடந்து கொண்டமை ஆகிய
குற்றச்சாட்டின் கீழ் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
பிரதமரின் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது பொலிஸார்
இடமளிக்கவில்லை என்பதால் அங்கு மோதல் நிலைமை உருவானதுடன் சிங்கள ராவய
அமைப்பின் பிக்கு ஒருவர் காயமடைந்தார்.

0 comments:
Post a Comment