• Latest News

    January 12, 2014

    மும்மொழியிலும் சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கான அரச விருது நியூஸ்பெர்ஸ்ட் வசம்

    மும்மொழியிலும் வருடத்தின் சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கான 3 அரச விருதுகளையும் நியூஸ்பெர்ஸ்ட் வெற்றிகொண்டுள்ளது.

    கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற 2013 ஆம் ஆண்டுக்கான அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் வருடத்தின் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதை நியூஸ்பெர்ஸ்டின் வசந்த பிரதீப் மாசிங்ககே வெற்றிகொண்டார்.

    வருடத்தின் சிறந்த தமிழ் மொழி மூல செய்தி வாசிப்பாளர் விருதை நியூஸ்பெர்ஸ்டின் சந்திரிக்கா ஆறுமுகம் தனதாக்கிக்கொண்டார்.
    2013 ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கில செய்திவாசிப்பாளர் விருது சொனாலி வனிகபதுகேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, 2013 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி முன்னோட்டத்திற்கான அரச விருதை சிரச லக்ஸபத்தி நிகழ்ச்சிக்காக சமித் பஸ்நாயக்க வெற்றிகொண்டார்.

    அதிக கமராக்கள் பயன்படுத்தப்பட்ட வருடத்தின் சிறந்த நிகழ்ச்சிகான விருது சிரச சுப்பர்ஸ்டாருக்காக சுமித் பிரசன்ன லாலுக்கு கிடைத்துள்ளது

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மும்மொழியிலும் சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கான அரச விருது நியூஸ்பெர்ஸ்ட் வசம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top