சஹாப்தீன்-
கல்முனை பிராந்தியத்தில் உள்ள கடற் தொழில் மீனவர்களுக்கு இன்று பாதுகாப்பு அங்கிகள் கல்முனை மாவட்ட கடற்தொழிற் திணைக்களத்தின் காரியாலயத்தில் வழங்கப்பட்டன.
கல்முனை மாவட்ட கடற்தொழிற் மீன் பிடித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கே.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்கட்டமாக 111 கடற் தொழில் மீனவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன.
01.01.2014 முதல் சகல கடற் தொழல் மீனவர்களும் பாதுகாப்பு அங்கிகள் அணிய வேண்டுமென்ற கட்டாயத்தின் அடிப்படையில் கடற்தொழில் மீன் பிடி அமைச்சினால் இப்பாதுகாப்பு அங்கிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த கல்முனை மாவட்ட கடற்தொழிற் மீன் பிடித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கே.செல்வராசா, மீனவர்களுக்கு இந்த அங்கி மிகவும் பாதுகாப்பானது, சுமார் 72 மணித்தியாலங்கள் கடலில் மிதக்கக் கூடியதாக இப்பாதுகாப்பு அங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அங்கிகளைப் பெற்றுக் கொண்ட மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பு அங்கிகள் எங்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. மீதமாக உள்ள மீனவர்களுக்கும் இப்பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.

0 comments:
Post a Comment