எஸ்.அஷ்ரப்கான்;
கல்வியமைச்சின்
சுற்றுநிருபத்திற்கமைவாக பாடசாலையில் தரம் -1ற்கு புதிய
மாணவர்களை உள்வாங்கும்போது மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி, புதிய ஆண்டுக்கான ஒரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்பும்
செயற்திட்டத்தினை முன்னெடுக்கும் நடவடிக்கையாக வழமைபோன்று கல்முனை வலயக்கல்விப்
பிரிவின் கல்முனை அல்- அஸ்ஹர்
வித்தியாலயத்தின் "ஏடு துவக்க விழா" அதிபர் ஏ.எல்.அப்துர் ரஸாக் தலைமையில் 2014.01.16 ஆந் திகதி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின்
பிரதி அதிபர் எம். அலிஅக்பர், ஆரம்பப்பிரிவு பகுதித்தலைவர் எம்.சம்சுதீன்,
கலாச்சாரக்குழு உறுப்பினர் மௌலவி எம்.எஸ்.ஏ.எம். அப்துர்ரஹீம் உட்பட பாடசாலை ஆசிரியர்கள்,
பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




0 comments:
Post a Comment