• Latest News

    January 16, 2014

    முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க ஐந்து தீர்மானங்கள் !: வை.எம்.எம். ஏ

    அஸ்ரப் ஏ சமத்;
     முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பட்டு வரும் பௌத்த தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக உள்நாட்டு வெளிநாட்டு மனித உரினை அமைப்புக்களிடம் முறையிட தீர்மானிக்கப் பட்டுள்ளது. மனித உரிமை வழக்கு உள்நாட்டிலும் ஜெனிவாவில் உள்ள மணித உரிமை அமைப்பிலும் முறையிடுவதற்காக சர்வதேச வை.எம்.எம். ஏ அமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளது .
    இன்று கொழும்பு 7 உள்ள ரோஸ்மிட் பிளேசில் உள்ள அஸ்ரப் ஹூசைன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 5 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இக் கூட்டத்திற்கு சட்டத்தரணி கௌசுல் அமீன், மற்றும் டாக்டர் யூசுப், அஸ்ரப் அசீஸ், என்.எம். அமீன்,  மௌலவி இஜ்லான் போன்ற 30க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.
    தீர்மானங்கள்:
    (1)    2012ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் தொடுக்கப்பட்ட சம்பவங்களை பட்டியலிட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடல்.
    (2)    ஏனைய மத அமைப்புக்களோடு குறிப்பாக கிரிஸ்த்துவ,கத்தோலிக்க ஹிந்து மத அமைப்புகளோடு  பௌத்ததீவிரவாத இயக்கங்கள் சிறுபாண்மையினருக்கு தொடுக்கும் மத கலாச்சாரரீதியிலான தாக்குதல் பற்றி கலந்துரையாடுவது.
    (3)    அரசியல்வாதிகள் அல்லாத இந்த நாட்டின் சட்டத்தரணிகள் , வைத்தியர்கள் பல்கழைக்கழகய விரிவுரையாளர்கள் போன்ற முஸ்லிம் புத்திஜீவிகள் கொண்ட அதி உயர் மட்டத்தில் தூதுக்குழுவொன்று இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து இந்நாட்டு முஸ்லிம்களின் நிலைப்பாட்டை விளக்குதல்.
    (4)    முஸ்லிம்களுக்குச் எதிராக  மார்க்க கலாச்சாரரீதியாக தொடுக்கப்பட்டுள்ள சம்பவங்களை ஆவணப்படுத்தி மூன்று மொழிகளிலும் ஒரு நூலொன்றை வெளியிடுதல்.
    (5)    சட்டம,; ஓழுங்கினை இலங்கையில் நிலை நாட்டுதல் முஸ்லிம்களுக்கு எதிராக தொடுக்கப்படும் பிரச்சினைகளுக்கு சட்டரீதியிலான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல்.
    போன்ற 5 விடயங்கள் தீர்மானக்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே முஸ்லிம் கவுன்சில் ஊடகா தயாரித்த அறிக்கையை சம்பந்தப்பட்டவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டில் இருந்து 2013வரை முஸ்லிம்களுக்கெதிராக 260 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.
    புள்ளிவாசல் சம்பந்தப்பட்ட விடயங்களுக்காக வக்பு சபை உள்ளது. ஆனால் 2008ஆம் ஆண்டின் பாராளுமன்ற சட்டத்தின்படி வெளியிட்ட சுற்றரிக்கை மீறி புதிதாக மதவிவகார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றரிக்கையின் படி மத ஸ்தாபணங்கள் நிர்மாணிக்கும்போது  பிரதேச செயலாளர் அறிக்கை, பொலிஸ் அறிக்கை நோ ஒப்பசக்சன் அறிக்கை பெறவேண்டிய புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
    சிங்களப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு தமது மத நிலையங்களை அமைப்பதற்கும்  மேலும் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும.;  பள்ளிவாசல் பிரச்சினைகளை  கையாலும் பிரச்சினைகளை வக்பு சபையிடமே கையளிக்க வேண்டும்.
    பொலிசார், விசேட அதிரடிப்படையினர் நாட்டில் உள்ள பள்ளிவாசல்களது கணக்கெடுப்பை ஆரம்பித்துள்ளனா;.
    கடந்த வாரம் தலைநகரில் உள்ள பம்பலப்பிட்டி பள்ளிவாசலில் ஒலிபெறுக்கி  மூ லம் அதான் கூறுவதை  2 பொலிசார்;கள் சென்று பள்ளிநிர்வாகத்திடம் நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளனா;. அங்கு ஒலிபெருக்கி ஊடாக பாங்கு சொல்வது நிறுத்தப்பட்டுள்ளது.
    முஸ்லிம்களது பிரச்சினைகளை  ஜனாதிபதி ஊடாக சகல முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் என்ற போரம் பேசியிருந்தது.  அதன் பிறகு எந்தப் பிரச்சினை வராமல் பாதுகாப்பதாக சொல்லப்பட்டிருந்தது.
    முஸ்லிம் கவுன்சில் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்து பலன்கொட பள்ளிவாசல் பிரச்சினையை பேசியது. கத்தோலிக்க சபையுடன் பேசப்பட்டுள்ளது.  சிகல உருமைய, பொதுபலசேனா போன்ற அமைப்புக்களுடன் முஸ்லீம் கவுன்சில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாகவும் என். ஏம். அமீன் இதன்போது தெரிவித்தார்.
    6 2 5 4 3 1
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க ஐந்து தீர்மானங்கள் !: வை.எம்.எம். ஏ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top