• Latest News

    January 20, 2014

    இலவச வைத்திய முகாம்

    ஏ.ஜே.எம்.ஹனீபா;
    அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள பிரபல சமூக சேவை அமைப்பான றிபாத் நண்பர்கள் ஒன்றியத்தின் 13வது வருட ஞாபகாத்தமாக சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள வருமானம் குறைந்த 300 குடும்பங்களுக்கு வைத்திய நிபுணர்களின் சேவையினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் எற்பாடு செயப்பட்ட இலவச வைத்திய முகாம்  சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.சியாத்நடைபெற்றது
    இந்த இலவச வைத்திய நிபுணத்துவ சேவையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த வைத்திய சாலையின் விNஷட சத்திர சிகிச்சை நிபுணர்களான வைத்திய கலாநிதி ஏ.டபிள்யூ.எம்.சமீம், மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.காரியவசம், பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஜயந்த விஜயபுர, தெஹியத்தகண்டிய வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எம்.ஜே.எம்.எம்.சுல்பி மரைக்கார், ஏலும்பு நோய்களுக்கான வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி அஹமட் எம் மசூர், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி இப்லால் சுபைர், கல்முனை வடக்கு மற்றும் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த வைத்திய சாலை என்பவற்றின் இரத்த வங்கி பொறுப்பதிகாரியும் சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் தலைவருமான லயன் டாக்டர் எம்.ஐ.எம்.சிறாஜ், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த வைத்திய சாலையின் உளநல வைத்திய அதிகாரி எம்.ஜே.நௌபல், டாக்டர் ஏ.றிஸ்வான், டாக்டர் எம்.றமீஸ், கிழக்க மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர், இணைப்பதிகாரி எம்.ஐ.எம்.தபீக்,சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் சிரேஷ;ட தலைவர் எம்.இப்றாலெப்பை உட்பட பல வைத்தயர்களும் தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், தொண்டர்களாக பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலவச வைத்திய முகாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top