• Latest News

    January 20, 2014

    மருதம் கலைக்கூடத்தின் கௌரவிப்பு விழா!

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    மறைந்த பிரபல வானொலி, தொலைக்காட்சி கலைஞர் சக்காப் இஸட்.மௌலானா அவர்களின் 13 ஆவது ஆண்டு நீனைவை முன்னிட்டு மருதம் கலைக்கூடல் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கௌரவிப்பு விழா(18-01-2014) சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
    மன்றத்தின் தலைவர் செயிட் அஸ்வான் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் சிரேஷ்ட ஒலிபரப்பாளர்- அதிபர்மணி ஏ.ஆர்.எம்.ஜிப்ரி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
    இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோத்தர் எம்.ஐ.உதுமாலெப்பை, கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப், கலாபூஷணம் முஹம்மட் அபூபக்கர் ஆகியோர் பொன்னாடை போர்த்தப்பட்டு- விருதுகள் வழங்கி- பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
    இதில் கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் சத்தார் எம்.பிரதௌஸ் அவர்கள், கலைஞர் சக்காப் சற்.மௌலானா அவர்களின் கலை, இலக்கிய வரலாற்று நினைவுத் தொகுப்புரையை நிகழ்த்தினார்.
    அத்துடன் இலங்கை வானொலி தேசிய சேவை அறிவிப்பாளர் கவிஞர் எஸ்.ஜனூஸ், மருதம் கலைக்கூடல் மன்றத்தின் சிரேஷ்ட பிரதித் தலைவர் எம்.ஐ.இஸ்ஸதீன், செயலாளர் எம்.எஸ்.ஜௌபர், பொருளாளர் எஸ்.எல்.றியாஸ் ஆகியோரும் உரையாற்றினர்.
    இவ்விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் ஈழத்து ஈ.எம்.நாகூர் ஹனிபா எனும் மருதமுனை கமால் அவர்களின் இஸ்லாமிய கீதங்களும் அரங்கேறின.
    அதேவேளை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிரேஷ்ட ஒலிபரப்பாளர்- அதிபர்மணி ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களுக்கு இதன்போது விசேட கௌரவம் அளிக்கப்பட்டது.







     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருதம் கலைக்கூடத்தின் கௌரவிப்பு விழா! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top