பங்களாதேஷின் , ஜமாஅதே இஸ்லாமிக் கட்சியின் தலைவர், மொய்துர் ரஹ்மான்
நிஸாமி அவர்களுக்கு பங்களாதேஷின் ஹசீனா அரசாங்கம் மரண தண்டனை விதித்துள்ளது
.2004 ஆம் ஆண்டு ஆயுதங்களைக் கடத்தினார்கள்
என்ற குற்றசாட்டில் மீதான ஒரு வழக்கில் நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை
விதித்துள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்ட தீர்ப்பு
என்றும் தனது கட்சிக் காரர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று இவர்களின்
சார்பில் வாதாடும் சட்டத்தரணி குற்றம் சாட்டியுள்ளார் .
2004ஆம்
ஆண்டு ஜமாஅதே இஸ்லாமிக் கட்சியின் தலைவர், மொய்துர் ரஹ்மான் நிஸாமி
உடன் மேலும் 13 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு அவர்கள்
அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்ப்ட்டுள்ளது.
மரண
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முன்னாள் உள்துறை துணை அமைச்சர் ஒருவரும்
அடங்குகிறார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாக
மொய்துர் ரஹ்மான் நிஸாமி கூறியுள்ளார் .
அதேவேளை
இவர் மீது 1971ல் நடந்த பங்களாதேஷ் சுதந்திரப் போரில் இழைக்கப்பட்டதாகக்
கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் குற்றவாளியென்று
காணப்பட்டிருக்கிறார். இதற்கும் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
என்று தெரிவிக்கப் படுகிறது .
0 comments:
Post a Comment