• Latest News

    January 13, 2014

    கிளிநொச்சியில் திடீர் மரணமடைந்த சிறுவனின் குடும்பத்திற்கு லண்டன் புலம்பெயர் அமைப்பு நிதியுதவி

    கிளிநொச்சி திருநகரில் அண்மையில் உயிரிழந்த சிறுவன் நிதர்சனின் குடும்பத்திற்கு லண்டன் புலம்பெயர் அமைப்பு வழங்கிய நிதியுதவியினை, வடமாகாண சுகாதார அமைச்சர் நேரில் சென்று கையளித்துள்ளார்.

    லண்டன் வாழ் தாயக தமிழர்களால் நடாத்தப்படும் Henshou Isshinryu கராத்தே கல்லூரியின் பிரதான பயிற்சியாளர் திரு.றென்சி கந்தையா இரவீந்திரன் அவர்களால் வழங்கப்பட்ட உதவித் தொகையான ஒரு இலட்சம் ரூபாய், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களால் நேற்று கிளிநொச்சி திருநகரில் உள்ள வீரலிங்கம் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது.


    கடந்த வாரம் கிளிநொச்சியில் அனைவரின் மனதை உலுக்கிய அந்த சம்பவம் நடந்தது.

    தடுப்பிலுள்ள தந்தையின் பிரிவால் குடும்ப சுமையை சுமந்த அந்த பாலகனின் வயது 14 தான். பயங்கரவாக தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக தடுப்பில் இருக்கும் தந்தையின் பிரிவால் இருக்கும் குடும்பத்தின் சுமையயை தாங்க தனது பாடசாலைக் கல்வியைவிட்டு விலகி தாயாரையும் சகோதரிகள் மூன்று பேரின் கல்வியைத் தொடர்வதற்காக அன்றாடக் கூலிவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றிய அந்த பாலகன் திடீரென மயங்கி விழுந்து சாவடைந்தான்.

    இதனால் தவித்துக்கொண்டிருந்த குடும்பத்தாரை பலரும் சென்று ஆறுதல்கூறி உதவிகளும் செய்திருந்த நிலையில், லண்டன் வாழ் தாயக உறவுகளால் நடாத்தப்படும் கராத்தே கல்லூரி இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.

    நேற்று கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள இவர்களது வீடடிற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் நிதியுதவியை கையளித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளார்.

     

     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிளிநொச்சியில் திடீர் மரணமடைந்த சிறுவனின் குடும்பத்திற்கு லண்டன் புலம்பெயர் அமைப்பு நிதியுதவி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top