• Latest News

    January 13, 2014

    பொது மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த செயற் திட்டம்

    ஏ.ஜே.எம்.ஹனீபா;
    நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் பரஸ்பரம், புரிந்துணர்வு என்பவற்றை ஏற்படுத்தி அதனூடாக மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ் மா அதிபர் இளங்ககோனின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு சிறந்த முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் என்பன தொடர்பாக சிறி ஜயவர்த்தன புர பல்கலைக் கழகத்தினால் வழங்கப்பட்ட பயற்சியின் பின்னர் பொலிஸ் நிலையங்களின் தரம் மற்றும் சேவைகள் தொடர்பாக கணிப்பிடும் நோக்குடன்  பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு நேற்று (12) அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

    இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்த குழுவினர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பிலும் கலந்து கொண்டு பொலிஸார் மற்றும் பொதுமக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் குறைபாடுகள் என்பவற்றையும் அறிந்த கொண்டனர்.

    சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட சிறி ஜயவர்த்தன புர பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மயூர சமரகோண் உரையாற்றுகையில் கடந்த 30 வருடகாலமாக எமது நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையின் போது பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கான சிறந்த சேவை வழங்க முடியாத காலகட்டமாக இருந்ததனால் சிவில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்கள் காணப்பட்டமை நாமறிந்த விடயமே. அவை தற்போது இல்லாமல் செய்யப்பட்டுள்ள நிலையில் வினைத்திறன் மிக்க சேவையினை மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்காகவே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தி நவீனவகையில் கால மாற்றத்துக்கு ஏற்ற வகையில் கவர்ச்சியான சேவையினை வழங்கி தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் நேhக்குடனே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில்  சிறி ஜயவர்த்தன புர பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களான மயூர சமரகோண, பேராசிரியர் அத்துக்கொரள, சிறி ஜயவர்த்தன புர பல்கலைக் கழகத்தின சிரேஷ;ட விரிவுரையாளர் திருமதி நெரஞ்சி விஜயவர்தன, தென்கிழக்குப்பல்கலைக் கழக சிரேஷ;ட விரிவுரையாளர் சமீம், அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹாகெதர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சந்திரசேகர, பொலிஸ் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஐ.ஏ.ஜப்பார் உட்படபலர் கலந்த கொண்டனர்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த செயற் திட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top