• Latest News

    January 07, 2014

    மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் ஒற்றுமையுடன் செயற்பட்டால்தான் மக்கள் பயன்பெறுவர்

    -முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
    மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவதன் மூலமே, நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்ல முடியும். இதன் மூலமே நாட்டு மக்களே பயன்பெறுவார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    எஸ்.ஓ.எஸ்.நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் கிராமத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
    பெற்றோரை இழந்த சமூகத்தில் உரிமை கோரப்படாத சிறார்களை பராமரிக்கும் வகையில் இக்கிராமம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் சுவிஸ் ஆகிய நாடுகள் இதற்கு நிதியுதவியளித்து வருகின்றன. யாழ்ப்பாணத்தில் 257 மில்லியன் ரூபா செலவில் ஸ்தாபிக்கப்பட்ட இச்சிறுவர் கிராமத்தில் பெற்றோரை இழந்த 97 பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் அனைத்து தேவைகளையும் இந்நிறுவனம் நிறைவேற்றி வருகின்றது.

    இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் கலந்து கொண்டார். இச்சிறுவர் கிராமம் ளுழுளு நிறுவனத் தினால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட ஆறாவது சிறுவர் கிராமமாகும். யாழ்ப் பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சிறுவர் கிராமம் இதுவாகும்.

    இதேநேரம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மாகாணத்திலுள்ள 23 பிரதேச செயலகங்களின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவுகளுக்கு கணனிகள் வழங்கப்பட்டன.

    இதில் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறினீவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் ஒற்றுமையுடன் செயற்பட்டால்தான் மக்கள் பயன்பெறுவர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top