எஸ்.ஆர்;
முல்லைத்தீவுக்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கம் தற்போது புத்தளம் நோக்கி மிகவும் மெதுவாக நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் வடபகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடர்ந்தும் காணப்படுமென திணைக்களத்தின் வானிலை அதிகாரி எம்.சாலிஹின் குறிப்பிட்டார்.
வடபகுதியிலும், மன்னார் வளைகுடா பகுதியிலும் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும், 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.முல்லைத்தீவுக்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கம் தற்போது புத்தளம் நோக்கி மிகவும் மெதுவாக நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் வடபகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடர்ந்தும் காணப்படுமென திணைக்களத்தின் வானிலை அதிகாரி எம்.சாலிஹின் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் மழையினால் சுமார் 100 பேர் இடம்பெயர்ந்து. தற்காலிக இடங்களில் தங்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment