• Latest News

    January 17, 2014

    இனவாத பொறிகளுக்குள் சிக்காது முஸ்லிம் மக்கள் மிகவும் புத்திசாலித் தனமாக வாக்குகளை பயன்படுத்த வேண்டும்

    இனவாதம் பேசும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மேல் மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார்.
    அவர் மேலும் தெரிவிக்கையில்,
    அரசாங்கம் முஸ்லிம் பள்ளிவாசல்களை உடைப்பதாக கூறி, கிழக்கில் இனவாதத்தை தூண்டி பிரசாரத்தில் ஈடுபட்ட ஹக்கீம், மேல் மாகாண சபைத் தேர்தலில் ஹலால், நிகாப் பிரச்சினைகளை கையில் எடுத்து தமது பிரசாசரத்தை மேற்கொள்ளவார்.

    இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உக்கிரமான இனவாத தேர்தல் பிரசாரங்களாகும். இதனால் ஹக்கீம் போன்றவர்களின் இனவாத பொறிகளுக்குள் சிக்காது முஸ்லிம் மக்கள் மிகவும் புத்திசாலித் தனமாக தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.
    மூவின மக்கள் செறிந்து வாழும் மேல் மாகாணத்தில் இப்படியான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு, சிங்கள அடிப்படைவாதிகளுடன் மோதல்களை ஏற்படுத்தி, அதனை தமது தேர்தலுக்கு சாதமாக பயன்படுத்தவே முஸ்லிம் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இனவாத பொறிகளுக்குள் சிக்காது முஸ்லிம் மக்கள் மிகவும் புத்திசாலித் தனமாக வாக்குகளை பயன்படுத்த வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top