• Latest News

    January 17, 2014

    பிரதான அரசியல் கட்சிகள் திரைப்பட நட்சத்திரங்களை மாகாண சபைத் தேர்தல்களில் களமிறக்க திட்டம்

    இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டிப் போட்டுக்கொண்டு பிரபல திரைப்பட நட்சத்திரங்களை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளன.

    ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபையின் வேட்பாளராக பிரபல நடிகையான ஓஷதி ஹேவாமத்தும போட்டியிட உள்ளார்.


    ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட பிரபல நடிகை நதீஷா ஹேமமாலி அந்த கட்சியின் சார்பில் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

    ஆளும் கட்சியின் சார்பில் பிரபல நடிகை கீதா குமாரசிங்கவும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதுடன் அவர் பெந்தர- எல்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

    அத்துடன் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா ஏற்கனவே அரசாங்கத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்து வருகிறார்.

    ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பிரபல நடிகர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில், மேல் மாகாண சபைத் தேர்தலில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சூழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

    முதலமைச்சராக மீண்டும் பிரசன்ன ரணதுங்க?
    எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவே நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் வெயங்கொட பிரதேசத்தில் மேம்பாலம் ஒன்றையும் கட்டிடம் ஒன்றை திறந்து வைத்தார்.

    அங்கு உரையாற்றிய ஜனாதிபதி பிரசன்ன ரணதுங்க முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனக் கூறியதாக தெரியவருகிறது.

    பொதுஜன ஐக்கிய முன்னணியின் 1993 ஆம் ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க போட்டியிட்டு, வெற்றி பெற்ற பின்னர் அந்த மாகாண சபை தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஆட்சியிலேயே இருந்து வருகிறது.

    சந்திரிக்கா, ஜனாதிபதியாக தெரிவான பின்னர், ரெஜினோலட் குரே முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினரா தெரிவானார். இதனையடுத்து பிரசன்ன ரணதுங்க முதலமைச்சராக பணியாற்றி வருகிறார்.

    எது எப்படி இருந்த போதிலும் மேல் மாகாண சபைக்கான ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் பலரது பெயர் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரதான அரசியல் கட்சிகள் திரைப்பட நட்சத்திரங்களை மாகாண சபைத் தேர்தல்களில் களமிறக்க திட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top