மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நான்கு வருடங்கள் அதிபராகக் கடமையாற்றி சம்மாந்தறை கல்வி வலயத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுச் செல்லும் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானாவுக்கான பிரியா விடையும், பிரதி அதிபராகக் கடமையாற்றிய எம்.எம்.ஹிர்பஹான் பதில் அதிபராகப் பொறுப் பேற்ற  நிகழ்வும் இன்று (06-01-2014) கல்லூரியில் நடைபெற்றது.
டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா பாடசாலை அபிவிருத்திச்சபை உறுப்பினர்கள் முன்நிலையில் பதில் அதிபர்  எம்.எம்.ஹிர்பஹானிடம் பாடசாலைப் பொறுப்புக்களைக்  கையளித்தார். டாக்டர் உமர்மௌலானா தனது பதவிக் காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதி, உதவி, அதிபர்களுக்கும், பகுதித் தலைவர்களுக்கும,; ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மற்றும் உத்தியோகத்தர்கள் ,சிற்றூழியர்களுக்கும் நன்றி தெரிவித்தாh.; மேலும் தனது பதவிக்காலத்தில் செய்திகளை எழுதிய  ஊடவியலாளர்களுக்கும் பிரசுரித்த ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக மருதமுனை ஒன்லைன் இணையத்தள சேவைக்கும் ஏனைய இணையத் தளங்களுக்கும் விஷேட நன்றிகளைத்  தெரிவித்தார். 
உமர் மௌலானா இறுதிப் பணியாக சகல வசதிகளையும் கொண்ட இவ்வருடத்திற்கான சிற்றூண்டிச் சாலையைத் திறந்து வைத்தார்.  ஆசிரியர்களும், மாணவர்களும் கண்ணீர் மல்க் உமர்மௌலானாவை வழியனுப்பிவைத்தனர்.
 உமர்மௌலானாவின் நான்கு வருடப்பதவிக காலத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தியிலும், பாடசாலையை அழகுபடுத்துவதிலும், மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களிலும் அதிக அக்கறை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்து.  



0 comments:
Post a Comment