மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள இத்தருணத்தில்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய நாடகமொன்றை
அரங்கேற்றவிருக்கிறார். இந்நாடகத்தினால் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது
என்று மத்திய மாகாணசபை உறுப்பினரும், தேசிய ஐக்கிய முன்னணி
தலைவருமான அஸாத் சாலி தெரிவித்தார்.
இதேவேளை சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த
விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள்
தாக்கப்படுவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வதேச
நீதிமன்றத்திற்கு முன்னிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது மேல் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஹிருணிகாவை மத்திய கொழும்பின் அமைப்பாளராக அரசாங்கம் நியமித்துள்ளது. இது மிகவும் வியப்பான நிகழ்வாகும்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உயிர்நீத்த பின்பு ஹிருணிகா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வீணாகிவிட்டது. ஹிருணிகாவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்ட மக்கள் ஏமாற்றம் கண்டுள்ளனர்.
இதேவேளை, ஹிருணிகாவை தொகுதி அமைப்பாளராக நியமித்தவுடன் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஏமாற்றப்பட்டார். அவர் அரசாங்க கடைக்கு போனதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. அரசை பாதுகாப்பதற்காக அனைத்து துறைகளிலும் உதவிபுரிந்தார். இருப்பினும் தனக்கு உதவி புரிந்தோரை ஓரங்கட்டுவதே ராஜபக்ச குடும்பத்தின் இயல்பாக உள்ளது.
இதேவேளை தற்போது இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் அதிகமாகிவிட்டது. அரசாங்கம் நினைத்தால் இதனை தடுத்து நிறுத்த முடியும். ஐனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தெரியும் போதைப்பொருள் கடத்தல் உரிமையாளர் யார் என்பது. அரசாங்கம் இவர்களுடைய புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டு மக்களுக்கு அறிவுறுத்த முடியும். ஆனால் அரசு அவ்வாறு செயற்பட்டால் அமைச்சர்களின் உண்மைகள் வீதிக்கு வந்துவிடும்.
இந்நிலையில் அரசாங்கம் பல கோடிக்கணக்கில் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்த போதிலும் அவையனைத்தும் வீணடிக்கப்படுகிறது. அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்ட போதும் குறித்த விமான நிலையத்தில் பறவைகளின் இடையூறின் காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாதுள்ளது.
அத்துடன் இவ்வரசு மூன்று குடும்பங்களை அடகுவைத்து கடன்பெற்று வருகிறது. மக்களை ஏமாற்றி வீதிகளுக்கு காபெட் இடுவதே இவ்வரசின் அபிவிருத்தியாக உள்ளது. வீதிகளை செப்பனிடுவது என்ற பெயரில் மக்களுடைய பணத்தை கொள்ளையிடுகின்றனர்.
தற்போது ரத்துபஸ்வல மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக நீரை வழங்க வேண்டும். அத்துடன் ஒரு தொழிற்சங்கவாதியாக, மீன்பிடித்துறை அமைச்சராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச, அதுமாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கு எதிராக ஐ.நா.விற்கு சென்று முறையிட்ட மஹிந்த ராஜபக்ச மக்களுக்கு தண்ணீர் துளியேனும் வழங்க மறுக்கிறார்.
அத்துடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்தவர் யாரென தனக்கு தெரியுமென மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார். இந்நிலையில் அவ்வாறு தெரிந்திருப்பின் ஏன் குறித்த குற்றவாளியை கைது செய்யவில்லை.
இலங்கையில் எல்லை மீறி ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். எனவே ஊடகவியலாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்பு நிறுத்த வேண்டும்.
அத்தோடு மாகாணசபை தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய நாடகமொன்றை அரங்கேற்றவிருக்கிறார். இந்நாடகத்தினால் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்றார்.

0 comments:
Post a Comment