ஆறுகள் உட்பட நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக களனிகங்கை, களுகங்கை உட்பட ஆறுகளிலும் மற்றும் மற்றைய நீர் நிலைகளிலும் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.
இதனால் நாட்டில் பல பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உயரமான பிரதேசங்களுக்கு நீரை விநியோகிப்பதில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் 6 மில்லியன் பாவனையாளர்களுக்காக நாளொன்றுக்கு 1.6 மில்லியன் கன மீற்றர் நீர் விநியோகிக்கப்படுவதுடன் அதில் கொழும்பு பிரதேசங்களுக்கு மாத்திரம் 5 இலட்சத்து 50 ஆயிரம் கன மீற்றர் நீர் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment