• Latest News

    January 23, 2014

    கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு தனிப் பிரதேச செயலகம் கொடுக்கக் கூடாதென நாம் ஒருபோதும் வாதிடவில்லை: கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர்

    எம்.வை.அமீர்;
    கல்முனை மாநகர சபையில் மனச்சாட்சிக்குப் புறம்பாக  நியாயமற்ற முறையில் எந்தவொரு விடயத்தையும் ஒருபோதும் அமுல்படுத்த முனைய மாட்டேன் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
    கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வில் கல்முனை கடற்கரைப் பள்ளி  வீதியின் பெயரை வர்த்தமானிப் பிரகடனம் செய்வதற்காக தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் பதிலுரை நிகழ்த்துகையிலேயே முதல்வர் இதனைக் குறிப்பிட்டார்.
    இப்பிரேரணையை மு.கா.உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் வழிமொழிந்தார். அங்கு முதல்வர் நிஸாம் காரியப்பர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
    'கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயம் தொடர்பில்இ தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் எவ்வித பேச்சுவார்த்தையும் செய்யாமல்இ வெறுமனே அரசியல் ரீதியான சந்தர்ப்ப சூழ்நிலைகளைத் தனக்காகப்பாவிப்பதற்கு எத்தனித்திருந்த பெளத்த பிக்குகளுக்குப் பின்னால் சென்றும் அவர்களூடாக சிறுபான் மையினருக்கு எதிராகவிருக்கும் அமைச்சர்களையும் மையமாக வைத்து முன்னெடுக்கப்பட்ட இரகசிய நடவடிக்கை போல்இ இந்த வீதிக்கான பெயர் சூட்டல் விடயத்தை நிச்சயம் நான் செய்ய மாட்டேன்.
    என்னைப் பொறுத்தவரை எந்தவொரு சமூகத்திற்கும் பிரதேசத்திற்கும் அநீதியிழைக்கும் எண்ணம் தனக்கு கிஞ்சித்தும் கிடையாது. ஏனெனில் அன்று முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து போராடிய போதுஇ அண்ணன் அமிர்தலிங்கம் ஈழத்தைப் பெற்றுத் தரா விட்டால் அதனை நான் பெற்றுத் தருவேன் எனக் கூறியபாரம்பரியத்தில் சிஷ்யனாக வந்த முதல்வராகவே இங்கு பேசுகின்றேன். தமிழர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களும் போராடுவது பற்றி வானொலியிலும்இ தொலைக்காட் சியிலும் நாம் நிறைய குரல் கொடுத்து வருகின்றோம். என் நண்பன் முன்னாள் எம்.பி. ரவி ராஜும் நானும் சேர்ந்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சிங்கள மொழியில் விமல் வீ ரவன்சவை வாதப்பிரதிவாதங்களுடன் மடக்கிய சம்பவமும் என்னால் மறக்க முடியாமல் இருக்கின்றது. ஆனால் இன்று இந்த சபையில் தமிழ் உறுப்பினர்கள் பேசுவதை பார்க்கும் போது மிகவும் கவலை அடைகின்றேன்.
    நியாயமற்ற எந்தவொரு விடயத்தையும் நான் ஒருபோதும் இச்சபைக்குக் கொண்டு வரமாட்டேன்.  குறைந்த பட்சம் கல்முனைப் பிரதேசத்தில் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும்இ சரித்திரப் பிரசித்தி பெற்ற கொடியேற்றப் பள்ளி தர்ஹாவைச்சென்றடையும் நியாயமான காரணங்கள் கொண்ட வீதிக்கு பெயரிட விரும்பும் முஸ்லிம்களுக்கு விட்டுக் கொடுப்புடன் செயற்பட முடியாத தமிழ் சமூகத்துடனா இவ்வளவு நாளும் ஒன்றிணைந்து போராடினோம் என்று என் மனச்சாட்சி கேட்கின்றது.
    இது மக்கள் கோரிக்கைஇ சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துதற்காக இப்பிரேரணையை நான் கொண்டு வரவில்லை. அப்படி நினைப்பதும் பேசுவதும் தான் இங்கு பிரச்சினையாக மாறுகிறது. கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு தனிப் பிரதேச செயலகம் கொடுக்கக் கூடாதென நாம் ஒருபோதும் வாதிடவில்லை. முட்டுக்கட்டை போடவுமில்லை. அது விடயத்தில் எல்லைகள் நிர்ணயம் செய்வதிலேயே பிரச்சினைகள் உள்ளன. அது இரு சமூகங்களாலும் திறந்த மனதுடன் பேசித் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும்..
    எமது கட்சியும் தலைமைத்துவமும் எம்.பி.க்களும் மாத்திரமல்ல மாநகர சபை உறுப்பினர் உறுப்பினர் றஹ்மான்இ பறக்கத் உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவருமே கல்முனை தமிழ் மக்களுக்குத் தனிப் பிரதேச செயலகம் கொடுக்கப்பட வேண்டுமென மிகத் தெளிவாகப் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
    ஆகையினால் இந்த சபையில் அங்கம் வகிக்கின்ற தமிழ் உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் மனச்சாட்சிப்படி விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்' என்று கேட்டுக்கொண்டார்.
    இதற்கு முன்னதாக இப்பிரேரணை தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களும் குறித்த வீதிக்கு மேற்படி பெயரை சூட்டுவதற்கு தம்மால் உடன்பட முடியாது எனத் தெரிவித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
    அதேவேளை ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள்
    சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் இப்பெயர் சூட்டப்படுவதற்கு ஆதரவாக
    கருத்துகளை முன்வைத்தனர். இந்நிலையில் குறித்த பெயர் சூட்டும் பிரேரணை முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கிய சபைஇ இது தொடர்பில் பொது மக்களின் மாற்றுக் கருத்துகளுக்காக 21 நாள் கால அவகாசம் வழங்குவது எனவும் தீர்மானித்தது.
    இந்த 21 நாள் அவகாசத்திற்குள் கிடைக்கப் பெறுகின்ற மாற்றுக் கருத்துகள் குறித்து அடுத்த கூட்டத்தில் ஆராய்வது எனவும் அதனைத் தொடர்ந்தே குறித்த பெயரை வர்த்தமானி பிரகடனம் செய்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் இதன்போது முதல்வர் நிசாம் காரியப்பர் சபைக்கு அறிவித்தாக கல்முனை முதல்வரின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு தனிப் பிரதேச செயலகம் கொடுக்கக் கூடாதென நாம் ஒருபோதும் வாதிடவில்லை: கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top