நேற்று புதன்கிழமை நண்பகல் திருகோணமலை
சந்தியில் சாலையோரம் வாசக அட்டைகளை எந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட
மீனவர்களுக்கு ஆதரவாக இன்று புல்மோட்டை பிரதேசத்தில் வியாபார நிலையங்கள்
அனைத்தும் மூடப்பட்டதாகவும், கணிசமான மாணவர்கள்
பாடசாலைகளுக்குச்
செல்லவில்லை என்றும் குச்சைவெளி பிரதேச உள்ளுராட்சி சபைத் தலைவர் ஆதம்பாவா
தௌபீக் கூறகின்றார்.
திருகோணமலை – முல்லைத்தீவு மாவட்டங்களின்
எல்லையாக அமைந்துள்ள கொக்கிளாய் கடலேரியில் திருகோணமலை மாவட்டத்தைச்
சேர்ந்த புல்மோட்டை, தென்னைமரவாடி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட சிங்கபுர
கிராம மீனவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கொக்கிளாய்,
கொக்குத்தாடுவாய் மற்றும் கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களை சேர்ந்த
மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு எற்கனவே
அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
புல்மோட்டை பகுதி மீனவர்களால் 30
வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த கட்டுவலை மீன்பிடித்தலுக்கு தற்போது
விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராகவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக
எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் .
கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின்
வர்த்தமானி அறிவித்தலின்படி கட்டுவலை பாவித்து மீன்பிடித்தல் சட்ட விரோதமாக
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம்
எடுக்கப்பட்டுள்ள நடிவடிக்கை காரணமாக சுமார் 3000 மீனவர்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்படுவதாக பல்மோட்டை சிறு கடற்றொழில் அபிவிருத்திய மத்திய கூட்டுறவு
சங்கத்தின் தலைவரான இஸ்மாயில் சைபுதீன் தெரிவிக்கின்றார்.
”சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை
பாவிப்பதற்கு எங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய பகுதி
மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடித்தலில் ஈடுபடும் போது மீன்பிடித் துறை
அதிகாரிகள் நடிவடிக்கை எடுப்தாக இல்லை” என்றும் அவர் குற்றம்
சாட்டுகின்றார்
ஆனால் இவரால் தெரிவிக்கப்பட்டுள்ள
குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள மீன் பிடித் துறை உதவி இயக்குநர்
ஜெயராஜசிங்கம் சுதாகரன், தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை
பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவே நடிவடிக்கைகள் எடுக்கப்படுவதாக
தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை தங்களின் போராட்டத்தின் போது
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் மீன்பிடித்துறை அமைச்சர், நீதி
அமைச்சர் மற்றும் மீன்பிடித்துறை அதிகாரிகள் என உரியவர்கள் நேரில் வருகை
தந்து, சாதகமான பதில் தரும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று இஸ்மாயில்
சைபுதீன் குறிப்பிடுகின்றார்.-BBC
0 comments:
Post a Comment