அமெரிக்க மிஸோரியில் படுகொலை குற்றவாளியொருவருக்கு விஷ ஊசி ஏற்றி புதன்கிழமை இரவு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டு சென்லூஸியசின் புறநகர்ப் பகுதியிலுள்ள நகையகமொன்றில் கொள்ளையில் ஈடுபட்டபோது அந்த நகையகத்தின் உரிமையாளரான ஸ்டீபன் ஹொனிக்மானை படுகொலை செய்து அவரது மனைவியான புளோரன்ஸை படுகாயப்படுத்தியதாக ஹேர்பேர்ட் ஸ்மல்ஸ் (56 வயது) என்ற மேற்படி நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவருக்கு பொன் டெர்ரியிலுள்ள சிறைச்சாலையில் பென்டோபார்பிடல் விஷ ஊசி ஏற்றப்பட்டது. இதனையடுத்து அவர் புதன்கிழமை அமெரிக்க நேரப்படி இரவு 10.20 மணிக்கு மரணத்தைத் தழுவினார்.1991ஆம் ஆண்டு சென்லூஸியசின் புறநகர்ப் பகுதியிலுள்ள நகையகமொன்றில் கொள்ளையில் ஈடுபட்டபோது அந்த நகையகத்தின் உரிமையாளரான ஸ்டீபன் ஹொனிக்மானை படுகொலை செய்து அவரது மனைவியான புளோரன்ஸை படுகாயப்படுத்தியதாக ஹேர்பேர்ட் ஸ்மல்ஸ் (56 வயது) என்ற மேற்படி நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்கனவே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு நிறைவேற்றப்படவிருந்த மரணதண்டனை, அதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னரான அமெரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவால் தடுத்து நிறுத்தப்பட்டது.
எனினும், அந்நாட்டு உயர் நீதிமன்றம் புதன்கிழமை இரவு அனைத்து மேன்முறையீடுகளையும் நிராகரித்து ஹேர்பேர்ட் ஸ்மல்ஸுக்கான மரணதண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில் ஹேர்பேர்ட் ஸ்மல்ஸ் இறப்பதற்கு 30நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில் பிறிதொரு மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், அது தொடர்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப் படவில்லை.

0 comments:
Post a Comment