வருடாந்த வரவு-செலவுத்திட்டம் தோற்றுபோனாலும், முன்னைய உள்ளூராட்சி
மன்றங்களின் மேயர்கள் அல்லது தலைவர்களை தொடர்ந்து பதவியிலிருக்க
வகைசெய்யும் சட்டமூல வரைவுக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதால்
கூட்டமைப்பினது உள்ளுராட்சி மன்றங்கள் சிலவும் தப்பித்துள்ளன.
தெற்கினில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 15 வரையிலான உள்ளூராட்சி
மன்றங்களின் தலைவர்கள் பதவிவிலக காரணமாக அமைந்த வரவு-செலவுத்திட்ட
தோல்விகள் காரணமாக மஹிந்த அரசாங்கம் இந்த சட்டத்தை திருத்த
முனைந்திருந்தது.
இந்த சட்டத்தின் நோக்கம் உள்ளூராட்சி மன்ற தலைவர்களின் எதேச்சாதிகார
போக்கை கட்டுப்படுத்துவதாகவே இருந்தது. ஆயினும், சுயநல நோக்கில்
உள்ளூராட்சி தலைவர்களை பதவி விலக்குவதற்காக வரவு-செலவுத்திட்டங்கள்
தோற்கடிக்கப்படுவதை நிறுத்தவே இந்த சட்டத் திருத்தம் அவசியமானதாக மஹிந்த
அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையினில் கூட்டமைப்பினது உட்கட்சி முரண்பாடுகளால் தலைக்கு மேல்
கத்தி தொங்கிக்கொண்டிருந்த பல உள்ளுராட்சி மன்றங்களும்
தப்பித்துள்ளன.கடைசியாக கூட்டமைப்பின் வலி.கிழக்கு பிரதேச சபையினது வரவு
செலவுத்திட்டம் அவ்வகையினில் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment