• Latest News

    January 20, 2014

    கொழும்பு காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்று அரசாங்கம் வியாபாரம் செய்கிறது

    கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள காணியொன்றை அரசுடமையாக்குவதற்கு ஜனாதிபதியினால் அமைச்சரவையில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபையின் ஐக்கி தேசியக் கட்சி உறுப்பினரல் முஜூபர் ரஹூமான் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இவ் விடயம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை ஆராய்வதற்காக முன்னாள் அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தலைமையில், ஜனாதிபதியினால் விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    அபிவிருத்தி என்ற போர்வையில் கொழும்பு காணிகளை வெளிநாடுகளுக்கு விற்கும் நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு, மெலே வீதியிலுள்ள காணியை இந்தியாவின் டாட்டா என்ற நிறுவனத்திற்கும் கங்காராமையில் அமைந்துள்ள காணியொன்றை இந்நியாவின் பிறிதொரு நிறுவனத்திற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
    அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாடுகளுக்கு காணி விற்பனை வியாபாரத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். கொழும்பில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.-
     அத தெரண
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பு காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்று அரசாங்கம் வியாபாரம் செய்கிறது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top