அஸ்ரப ஏ சமத்:
கடந்த வாரம்
கொழும்பு 7ல் சர்வதேச வை.எம்.எம்.ஏ அசொம்பிளியின் தலைவர் அஸரப் ஹுசைன்
வீட்டில் நடைபெற்ற கூட்டம் சம்பந்தமாகவும் “ஜெனிவாவுக்குச் சென்று
முஸ்லிம்களது பிரச்சினைகளை முறையிடுவது” என்ற
செய்தி ஊடகங்களில் வெளிவந்ததையிட்டு பாதுகாப்பு அமைச்சின் உள்ள முஸ்லிம்
அதிகாரி ஒருவர் அஸ்ரப் ஹுசைனை அவரது வீட்டுக்குச் சென்று பேசியுள்ளார் .
அவர் ஊடகங்களின் “முஸ்லிம்களது
பிரச்சினைகளை ஜெனிவா மணித உரிமைக்குச் சென்று முறையிடுவது” என்ற செய்தியை
ஊடாகவே அஸரப்
ஹுசைனை தேடிவந்து பேசியுள்ளார் என அஸ்ரப் ஹுசைன்
தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு நடந்த விடயங்கள் பற்றி
ஆராய்வதற்கும் அது சம்பந்தமான அறிக்கைகளை தயார்படுத்து தனது மேலதிகாரியுடன்
பேசுவதற்கும் நேரம் ஒதுக்குவதாகவும் அந்த அதிகாரி இதன்போது
தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment