இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய
ஆசிய விவகாரங்களுக்காக உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால்,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு பொருளாதார அபிவிருத்தி அமைச்சில்
இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்,
அமைச்சருடன் விடயங்களை பரிமாறிக் கொண்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்
ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ள பிஸ்வால், அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். அதன் ஒரு கட்டமாகவே அவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தார்.
அமைச்சருடன் இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க துதூதுவர் மிசேல் சீசென், வடக்கு மாகாண மீள்குடியேற்ற, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணிக் குழுவின் செயலாளர் எஸ்.பி. திவாரட்ன உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment