பிரிட்டனின் மிக பெரிய அணு மீள்உற்பத்தி
ஆலையான செல்லாஃபீல்ட் ஆலையில் கதிரியக்க வீச்சின் அளவு அதிகரித்துள்ளமை
கண்டறியப்பட்டுள்ளதால் இல் தொழில் புரியும் மிக அவசியமான பணியாளர்களைத்
தவிர ஏனையவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த அதிகரித்த கதிரியக்க
வீச்சின் அளவு காரணமாக மக்களுக்கோ பணியாளர்களுக்கோ அச்சுறுத்தல் ஏதும்
இல்லை என்று வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கம்பிரியா பகுதியில்
அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதுடன் கதிரியக்க வீச்சின் அளவு அதிகரித்துள்ளமைக்கான காரணம் பற்றி ஆராயப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதுடன் கதிரியக்க வீச்சின் அளவு அதிகரித்துள்ளமைக்கான காரணம் பற்றி ஆராயப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
இதே வேளை செல்லாஃபீல்ட் ஆலை நிர்வாகத்துடன் இது தொடர்பில் பேசி வருவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment