• Latest News

    February 10, 2014

    நிலையான சமாதானத்திற்கும்இ இன நல்லுறவுக்கும் வருங்கால பெண்களின் பங்களிப்பு பற்றி செயலமர்வு

    கல்முனை நிருபர்;
    நாட்டின் நிலையான சமாதானத்திற்கும், இன நல்லுறவுக்கும் வருங்கால பெண்களின் பங்களிப்பு, தஃவா நிகழ்வும் எனும் விசேட தொனிப்பொருளில் சாய்ந்தமருது அத்-தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் இருநாள் செயலர்வு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்றது.

    சாய்ந்தமருது அத்-தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபரும், அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்கள அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் தேசமானிய ஏ.எம்.றிஸ்வி பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்மருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத், அத்-தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் பொருளாளர் ஏ.சீ.எம்.இக்பால் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் மௌலவியாக்கள், விரிவுரையாளர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இதன்போது இருநாள் செயலமர்வை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பெண்களுக்கான சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிலையான சமாதானத்திற்கும்இ இன நல்லுறவுக்கும் வருங்கால பெண்களின் பங்களிப்பு பற்றி செயலமர்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top