• Latest News

    February 07, 2014

    கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் விசேட தேவையுடையவர்ளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன

    ஏ.ஜே.எம்.ஹனீபா;
    இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தையிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் மற்றும் சுயதொழில் முயற்சிக்கான காசோலை என்பன வழங்கும் நிகழ்வு இன்று (04) சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
    இவ் வைபவத்தில் அதீதிகளாக கலந்த கொண்ட கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை
    உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட,; உதவி தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், பிரதேச செயலாளர் எ.மன்சூர், வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், அம்பாறை மாவாட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிஷhந்த சந்திரசேகர, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க, ஆகியோர் விNஷட தேவையுடையவர்களுக்குரிய பொருட்களை வழங்கி வைத்தனர்.
    இந்நிகழ்வின் போது 08 பேருக்கு சக்கர நாற்காலிகளும், 02பேருக்கு ஊன்றுகோலும், 01வருக்கு சுயதொழில் முயற்சிக்கான இருபதாயிரம் பெறுமதியான காசோலையம் வழங்கி வைக்கப்பட்டன.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் விசேட தேவையுடையவர்ளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top