எம்.வை.அமீர்;
நாட்டின் பல பிரதேசங்களில் பிரதேச அபிவிருத்தி பற்றி பேசுவோர் விசேடமாக முஸ்லீம் பிரதேசங்களில்,அக்கரைப்பற்றையும் காத்தான்குடியையும் உதாரணமாக கூறுவதுண்டு. குறிப்பிட்ட பிரதேசங்களை ஆளும் அரசியல் தலைவர்கள் வெளியே தெரியக்கூடிய சில வேலைகளை செய்து விட்டு உள்ளே பல விடையங்களை விட்டு விடுகின்றனர். அந்த வரிசையில் அக்கரைப்பற்றில் பிஸ்கால் சந்தியிலுள்ள முதலாவது குறுக்கு வீதி , கவனிப்பார் அற்று 3 ஆண்டுகளாக மழை காலங்கில் இவ்வீதி, ஊரின் வாய்க்காலாகவும் கேடைகாலங்களில் சுருப்பு நிரைந்த களப்பு போன்றும் காட்சியளிக்கின்றது.
முன்னாள் அமைச்சர் சேகுஇஸ்ஸதீனுடைய வீடு இவ்வீதியில் இருந்ததனால், அப்போது அவரினால் இவ் வீதி சற்று செப்பனிடப்பட்டது. அதன் பின்னர் அக்கரைப்பற்று பல்வேறுபட்ட அபிவிருத்திகளைக் கண்ட போதும், பிஸ்கால் சந்தியிலுள்ள முதலாவது குறுக்கு வீதி அக்கரைப்பற்றை அபிவிருத்தி செய்கிறோம் என்று சொல்பவர்களால் அபிவிருத்தி செய்யப்படவில்லை.குறித்த இவ் வீதியால் அதிகப்படியான பாதசாரிகளும் மாணவர்களும் பள்ளிவாசல், பாடசாலை, பாடசாலை மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய அன்றாட தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.
மேற்படி இவ் வீதியை செப்பனிட்டு தருமாறு, இவ் வீதியில் வசிப்போராலும் ஏனைய பாதசாரிகளாலும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதும், இன்றுவரை இவர்களது அத்தியாவசிய தேவையான இவ் வீதியை செப்பனிடுவதர்க்கான எவ்வித உருப்படியான நடவடிக்கைகளும் மேட்கொள்ளப்படவில்லை எனஇ மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சமூகத்தில் ஒவ்வொருத்தருக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட போதும் அந்தப் பொறுப்புக்களை உரியவர்கள் செவ்வனே நிறைவு செய்து கொள்வது அவர்களின் மீதுண்டான தலையாய கடமையால்லவா? உண்மையில் இவ்வீதியானது அன்றாடம் அதிகமான மக்களால் பிரயோசனப்படுத்தப்படும் வீதியாகும். பாடசாலை மாணவர்கள், முதியோர்கள், பாதசாரிகள் மற்றும் இன்னும் அதிகமானோர்களால் பயன்படுத்தப்படுகிறது. அண்டிய காலங்களிலும் இவ்வீதியால் பயணம் செய்யும் பிரயாணிகளும், பாதசாரிகளும் முணு முணுத்துக் கொண்டே செல்கின்றார்கள்.
சக்திவாய்ந்தஅமைச்சர், மாகாண வீதி அமைச்சர், மாகாண சபை உறுப்பினர், மாநகர முதல்வர் போன்றோர் இருந்தும் இவ்வீதியின் அவல நிலையை கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளது வேதனையளிப்பதாக இவ் வீதியில் வசிக்கும் மக்கள் அவர்களது ஆதங்கத்தை வெளியிடுகின்றனர்.
இவ் வீதி பிரதான வீதிக்கு அடுத்துள்ள இரண்டாம் குறிச்சியுளுள்ள பொது வீதியாகும். இவ்வீதியில் தொருலாம்பு கூட நீண்ட காலமாக பழுதடைந்து சீர் செய்யப்படாமல் இருப்பதாகவும் மக்கள் குறைகளை அடுக்கிச்செல்கின்றனர்.
அக்கரைப்பற்றின் அரசியல் தலைவர்களே! பிஸ்கால் சந்தியிலுள்ள முதலாவது குறுக்கு வீதியை செப்பனிட்டு மக்களின் குறைகளை போக்குவீர்களா?...................




0 comments:
Post a Comment